சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாரத் கியாஸ் லாரிகள்
பாரத் கியாஸ் லாரிகள்

தமிழ்நாடு பாரத் கியாஸ் எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் உள்ளிட்ட பாரத் பெட்ரோலியத்தின் எல்பிஜி  பிளான்ட்டுகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக விநியோகஸ்தர்கள் ₹600 வாங்கி வந்தனர். அதை  தற்போது ₹950  ஆக உயர்த்தி வசூலிக்கின்றனர். ஆனால், விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி மிக குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.

அதேபோல், சிலிண்டரின் மூடிகள் காணவில்லை என மாதந்தோறும் ஒவ்வொரு லாரி உரிமையாளர்களிடமும் 3 ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்கின்றனர். இதனைக் கண்டித்து  தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளான்ட்களிலும் லாரி உரிமையாளர்கள் லாரி இயக்காமல் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் கடந்த மூன்று நாட்களாக இந்த பிளான்ட்களில் இருந்து சிலிண்டர் சப்ளை மேற்கொள்வது, 60 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.  இந்த ஏழு கியாஸ் ஆலைகளில் இயங்கி வந்த 500 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால்  மூன்று நாட்களில் சுமார் 100  கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனால் கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ,சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in