கரும்பு விவசாயிகளின் கவனத்திற்கு... வேளாண் பட்ஜெட்டில் பல 'இனிப்பான' அறிவிப்புகள்!

கரும்பு சாகுபடி
கரும்பு சாகுபடி
Updated on
2 min read

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி நிதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

2024-25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பேரவையில் அவர் பேசியதாவது:

2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும். நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சியை இந்த ஆண்டில் நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

மரவள்ளிப் பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம் வழங்கப்படும். பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in