அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்
Updated on
1 min read

ஆந்திராவைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வீடியோவைக் காண்பித்து மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மருத்துவர் ஸ்ரீநிவாச ரெட்டி. இவர் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்காமலே அவர்களுக்கு விருப்பமானதைக் காண்பித்து அறுவை சிகிச்சை செய்து வழக்கம். அது போல சமீபத்தில் வயிற்று வலியால் துடித்த மணிகண்டன் என்ற நோயாளிக்கு செய்த அறுவை சிகிச்சை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

வயிற்று வலியால் தவித்து வந்த நோயாளி மணிகண்டனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு கடந்த 11-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது சமீபத்தில் அயோத்தியில் நடைபெற்ற ராடர் கோயில் கும்பாபிஷேக வீடியோ பதிவை அறுவை சிகிச்சை அரங்கத்தில் போட்டு காண்பித்தவாறே மணிகண்டனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் ஸ்ரீநிவாச ரெட்டி கூறுகையில், “மணிகண்டனுக்கு அதிகமான தெய்வபக்தி இருக்கிறது. இதனால், அவருக்கு அயோத்தி பாலராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவைப் போட்டு காண்பித்தவாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மணிகண்டனும் அதில் மிகவும் லயித்து பார்த்தவாறே அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அப்போது அவர் ஜெய் ஸ்ரீராம் என பலமுறை கூறினார்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in