பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

சட்டப் பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
சட்டப் பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
Updated on
1 min read

2024-25ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பேரவையில் அவர் பேசி வருவதாவது:

வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகள் குறைக்கப்படும். மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கத்தின் கீழ், துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

'ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர்க்காப்பீட்டுத் திட்டம்" 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in