இலங்கை அரசு அடாவடித்தனம்... தமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை!

தமிழக மீனவர்கள் படகு
தமிழக மீனவர்கள் படகு

தமிழ்நாடு மீனவர்கள் 3 பேருக்கு ஏற்கெனவே இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்த நிலையில் மேலும் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4-ம் தேதி, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதில் 20 மீனவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டனர். மேலும், 2 மீனவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்புக்கு எதிராகவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், மத்திய மாநில அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். அத்துடன் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

மீனவர்கள்
மீனவர்கள்

அவர்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மத்திய மாநில அரசுகள் மூலமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, தமிழக மீனவர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


விவசாயிகள் திடீர் முடிவு... 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம்?... திமுக நாளை கலந்தாலோசனை!

குட்நியூஸ்... பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நாளை முதல் ஆதார் பதிவு!

கைது நடவடிக்கைக்கு பயந்து, இரவு முழுவதும் கட்சி அலுவலகத்தில் தங்கிய காங்கிரஸ் தலைவர்!

50 லட்சம் பக்தர்கள் தரிசனம்... அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in