50 லட்சம் பக்தர்கள் தரிசனம்... அயோத்தி ராமர் கோயிலில் குவியும் பக்தர்கள்!

அயோத்தி ராமர்
அயோத்தி ராமர்
Updated on
1 min read

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 50 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பகவான் ராமர் கோயில் ரூ.1800 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இக்கோயிலில் பகவான் பாலராமர் பிரான் பிரதிஷ்டை விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மறுநாள் முதல் ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமர் கோயில் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 50 லட்சம் பக்தர்கள் பகவான் ராமரை தரிசித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

கோயிலில் இன்னும் நீண்ட வரிசை, நீண்ட தூரம் நடக்க வேண்டியது போன்ற சூழல் நிலவுவதாகவும், அதிகாரிகள் இதை திறம்பட கையாள்வதால் விரைவில் சாமி தரிசனம் செய்ய இயல்வதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில், “நான் கடைசியாக கடந்த 2004ல் இங்கு வந்தேன். அப்போது, அழுக்கு கூடாரத்தின் கீழ் ராம் லல்லாவைப் பார்த்து ஒருபோதும் திரும்பி வர மாட்டேன் என சபதம் செய்தேன். கோயில் கட்டப்பட்ட பிறகு, தற்போது என் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளேன். இது இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம்” என்றார்.

பாலராமரை தரிசிக்க செல்லும் பக்தர்கள்
பாலராமரை தரிசிக்க செல்லும் பக்தர்கள்

அயோத்தியில் தற்போது தினமும் 6 விமானங்கள் தரையிறங்குகின்றன. புதிய ஆஸ்தா ரயில்கள் மூலம் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருகின்றனர். உத்தரப் பிரதேச அரசு பஸ் வசதிகளையும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கோயிலுக்கு தினமும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in