உடனே முந்துங்க... நாளை முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... முன்பதிவு துவக்கம்!

உடனே முந்துங்க... நாளை முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... முன்பதிவு துவக்கம்!

பொங்கல் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட திட்டமிடுபவர்களின் வசதிக்காக நாளை முதல் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்தது.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொங்கல் விடுமுறை தினங்களை சொந்த ஊரில் கழிக்க விரும்பும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரயில், பேருந்து போக்குவரத்து முன்பதிவு கிடைக்காத பயணிகள், சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை ஜனவரி 11ம் தேதி மற்றும் ஜனவரி13, 16-ம் தேதிகளிலும் திருநெல்வேலியிலிருந்து ஜன. 12, 14, 17-ம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 3 ஏசி 3 டயர் கோச்சுகளும், 9 - ஏசி 3 டயர் எகானமி கோச்சுகள், 2 ஸ்லீப்பர் கோச்சுகள், 3 ஜெனரல் செகன்ட் கிளாஸ் கோச்சுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 9.50க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 11.15க்கு திருநெல்வேலி சென்றடையும். அதே போல் மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து பகல் 2.45க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 3.15க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 14 மற்றும் 16-ம் தேதிகளில் திருநெல்வேலி வரை சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜனவரி 15 மற்றும் 17ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

துணைமேயரை கொல்ல முயன்றது திமுக வட்டச் செயலாளரா?: மதுரை அரசியலில் பரபரப்பு!

பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா!

இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் வரவானதால் மகளிர் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in