அமைச்சர்கள் மீதான வழக்குகளின் விசாரணை எப்போது? - தேதியை அறிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது தாமாக முன் வந்து எடுத்த வழக்குகளை வரும் 27ம் தேதி முதல் விசாரிக்க உள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

சொத்துக் குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன. இதையடுத்து, கீழமை நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் மாஸ்டர் ஆப் ரோஸ்டராக இருந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை ஆராய்ந்து பார்த்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அந்த வழக்குகளில் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து அவர், மீண்டும் விசாரணையை நடத்த திட்டமிட்டார். இதையடுத்து, அந்த வழக்குகளை நீதிபதி தாமாக விசாரிக்க உள்ளதாக கூறி உத்தரவினை பிறப்பித்தார். இதை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 5ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, நேற்று, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து, இன்று, அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் மட்டுமல்லாது, தாம் முன் வந்து எடுத்த அனைத்து வழக்குகளையும் தன்னை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்திருப்பதாக கூறினார்.

மேலும், இந்த வழக்குகளில் உள்ளவர்கள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என்பதால், ஒவ்வொன்றையும் சிறப்பு வழக்காக விசாரிக்க பட்டியலிடப்படும் என்றார். மேலும், வழக்குகளின் விசாரணை வரும் 27ம் தேதி முதல் துவங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in