வாக்களிக்க சொந்த ஊர் போறீங்களா?... கோவை, குமரிக்கு சிறப்பு ரயில்கள்; 10,214 சிறப்பு பேருந்துகள்!

சிறப்பு ரயில், பேருந்துகள்
சிறப்பு ரயில், பேருந்துகள்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏப்ரல் .19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. இந்த சூழலில் வாக்குப்பதிவை ஒட்டி 10, 214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்
ரயில்

அதன்படி தாம்பரம் – கன்னியாகுமரி இடையேயான சிறப்பு ரயில் (06001), ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

சென்னை எழும்பூர் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06003) சென்னையிலிருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

ரயில்
ரயில்

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள்

ஏப்ரல் 19-ல் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. 17, 18 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in