ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது...  மீறினால்  சிறை!

தேர்தல் பிரச்சாரம் ஓயும் நாளை மாலை 6 மணிக்குப் பின் ஊடகங்கள் மற்றும் வலைதளங்களிலும் கூட தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. எதிர்வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது.  தமிழ்நாட்டில் அதிக வெப்பம் காரணமாக அது ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓயும்  என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

பிரச்சாரம் ஓய்ந்த பின்னர் தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தக்கூடாது. அதில் வேட்பாளர்கள் பங்கேற்கக் கூடாது. தேர்தல் தொடர்பான விவகாரங்களை மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை மாலை ஆறு மணிக்கு மேல் ஊடகங்கள் மற்றும் வலைதளங்களிலும் கூட பிரச்சாரம் செய்யக்கூடாது. மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in