இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவினை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் வேகம் பிடித்துள்ளன.

ஏப்.19, முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் களமாடல் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களின் பல்வேறு பிராந்தியங்களில் இந்த முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து மிகக்குறைந்த அவகாசத்தில் அரசியல் கட்சிகள் இந்த ஏப்-19 வாக்குப்பதிவுக்கு தயாராகி உள்ளன.

பிரதமர் மோடி ரோடு ஷோ
பிரதமர் மோடி ரோடு ஷோ

பிரதமர் மோடி தேர்தல் அட்டவணை அறிவிப்பதற்கு சில தினங்கள் முன்பிருந்தே முழு வீச்சில் மாநிலங்களுக்கு படையெடுத்து நலத்திட்டங்கள் அறிவிப்பு மற்றும் பணிகள் நிறைவடைந்த திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு ஆகியவற்றில் மோடி ஈடுபட்டிருந்தார். தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் தனது பிரத்யேக ரோ ஷோ மூலம் பெரும் நகரங்களை வலம் வந்தார். மோடி எதிர்ப்பு அலைக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படும் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் இந்த ரோடு ஷோ பட்டையைக் கிளப்பின. இவற்றுக்கு அப்பால் ஊடகப் பேட்டிகள் பலவற்றிலும் மோடி காட்சி தந்தார்.

பாஜகவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது இந்தியா கூட்டணி தொடக்கத்தில் பெருமளவு தத்தளித்தது. அதிலும் கூட்டணிக் கட்சிகள் இடையே எழுந்த முரண்பாடுகள் காரணமாக, மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளே எதிரும் புதிருமாக நின்று ஆச்சரியமளித்தன. எனினும் தொடர் கைதுகள், வழக்குகள், விசாரணைகள் இந்தியா கூட்டணியினர் முடக்கப்பட்டாலும், அவையனைத்து பாஜக கண்ட பதற்றத்தின் எதிரொலியே என்று உணர்ந்ததும் இந்தியா கூட்டணி வேறாக மாறியது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக மேடைகளை பகிர்ந்து கொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா கூட்டணியினர் கூட்டு பொது குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, இந்தியா கூட்டணி பொதுவான பிரச்சினைகளில் அதன் நிலைப்பாட்டை விளக்கக்கூடும். இந்த வகையில் வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அரசியலமைப்பு சட்டங்களை காப்பாற்றுதல் போன்ற பொதுநலன் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் வகையில் அவை மாற்றம் பெற்றன.

ராகுல் காந்தி ரோடு ஷோ
ராகுல் காந்தி ரோடு ஷோ

அவற்றில் ஒன்றாக தேர்தல் பத்திரம் விவகாரத்தை இறுதிச்சுற்றில் எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கின்றன. இதனை எதிர்பார்த்தே, தேர்தல் பத்திரம் குறித்து இறுக்கமாக இருந்த மோடி, அத்திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று வாய் திறந்தார். “இதற்காக எல்லோரும் வருத்தப்படுவார்கள்” என்று அதிரடித்தார். ஆனால், ஊழல் எதிர்ப்பை சதா முழங்கும் பாஜக, நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நிதி சேர்த்துள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். அவரைப் பின் தொடர்ந்தே ஆம் ஆத்மி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கூட்டணியின் பிரதான கட்சிகள் தேர்தல் பத்திரம் விவகாரத்தை அதிகம் முழங்க ஆரம்பித்திருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in