பெரம்பலூரா, கள்ளக்குறிச்சியா? பரிதவிக்கும் பாரிவேந்தர்!

பாரிவேந்தர்
பாரிவேந்தர்
Updated on
2 min read

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் எம்பி-யுமான பாரிவேந்தர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடலாமா அல்லது தொகுதி மாறலாமா என்ற பரிதவிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி என்றாலே எல்லோருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனர் பாரிவேந்தர் தான். இந்த தொகுதியில் முதல் முறையாக கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு அவர் எம்பி ஆனார்.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

இவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கும், நிர்வாக அனுபவத்திற்கும் தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகளை பூர்த்தி செய்து சிறந்த நாடாளுமன்றவாதியாக வலம் வந்திருக்கலாம்.

ஆனால், தனக்கு கிடைத்த முதல் எம்பி வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் பாரிவேந்தர். தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு சில பணிகளை மேற்கொண்டுள்ளனர். தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டும் புகழும் அரசியல் தலைவராகவே பாரிவேந்தரின் மக்கள் பிரதிநிதி பணி அமைந்து விட்டதாக தொகுதி முழுக்கவே எதிரொலிக்கிறது.

தனது கட்சி, ஆதரவாளர்களைத் தாண்டி பொதுமக்கள் மெச்சும்படியாக அவரது செயல்பாடு அமையவில்லை என்கிறார்கள் தொகுதிவாசிகள். சொல்லப்போனால் கடந்த தேர்தலுக்குப் பிறகு இவரை தொகுதிக்குள் பார்க்கவேயில்லை என்கின்றனர் பொதுமக்கள். மேலும், தேர்தல் காலத்தில் செய்திகளில் வந்துபோகும் அரசியல் தலைவராகவே மாறிவிட்டார் பாரிவேந்தர்.

இந்திய ஜனநாயக கட்சி
இந்திய ஜனநாயக கட்சி

இவரது ஐஜேக கட்சி கடந்த 2010ல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டே நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினார் பாரிவேந்தர். ஆனால் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட்டு அதிமுகவின் மருதராஜாவிடம் தோல்வியை தழுவினார்.

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 45 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் ஐஜேகே தோல்வியைத் தழுவியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக முகாமுக்கு தாவி, பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேக இணைந்தது. இந்த முறை 40 தொகுதிகளில் போட்டியிட்டு மீண்டும் படுதோல்வியை சந்தித்தது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரிவேந்தர் மீண்டும் பாஜக முகாமுக்கு தாவியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களிடம் நம்பிக்கையை பெற தவறியதாலும், வாக்கு வங்கி வலுவில்லாத கூட்டணியில் உள்ளதாலும் பாரிவேந்தர் தேர்தலில் கரைசேர்வது கடினம் தான் என்கின்றனர் உள்ளூர் அரசியல்வாதிகள்.

மேலும், பெரம்பலூரில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த காரணங்களால், கள்ளக்குறிச்சி தொகுதி பக்கம் சென்றவிடலாம் என பாரிவேந்தர் ஒரு கணக்கு போட்டுள்ளதாகவும், அவரது கட்சியில் தகவல் உலவுகிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஆனால், கள்ளக்குறிச்சியிலும் பாரிவேந்தருக்கு தர்மசங்கடம் காத்திருக்கிறதாம். அந்த தொகுதியில் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருப்பதால் அக்கட்சி இணையும் கூட்டணி சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தான் குறிவைத்திருக்கும் இரண்டு பக்கமும் 'டஃப் பைட்' காத்திருப்பதால் எந்த பக்கம் செல்வது என்கிற பரிதவிப்பில் பாரிவேந்தர் உள்ளார் என்பதே பெரம்பலூரின் அரசியல் பேச்சாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in