மதுரை அருகே களைகட்டிய மீன்பிடித் திருவிழா... கிராம மக்கள் குதூகலம்!

மீன்பிடி திருவிழா
மீன்பிடி திருவிழா HR Ferncrystal

மதுரை அருகே ஐந்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் மீன்பிடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. கண்மாயில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில், தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன. அவற்றை குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித்தனர்.

மீன்கள்
மீன்கள் HR Ferncrystal

இதில் குறவை, கெளூர், கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. இதனை ஏராளமானோர் பிடித்துச் சென்று மகிழ்ந்தனர். இதில் சிறுவர் சிறுமி முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிடித்த மீனை அள்ளும் பெண்கள்.
பிடித்த மீனை அள்ளும் பெண்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "10 ஆண்டுகளுக்குப் பிறகு கணமாயில் நீர் பெருகி இருந்ததால் இந்தாண்டு எதிர்பாராத விதமாக மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. இதனை பிடிப்பதற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு வேண்டிய மீன்களை சந்தோஷத்துடன் மீன்பிடி திருவிழா மூலம் பிடித்துச் சென்றனர்" என்று தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in