வேங்கைவயலில் வாக்களிக்கின்றனர் மக்கள்... அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் மனமாற்றம்!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுகோப்பு படம்

தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காலை முதல் வெறிச்சோடிய வேங்கை வயல் வாக்குச்சாவடி
காலை முதல் வெறிச்சோடிய வேங்கை வயல் வாக்குச்சாவடி

இந்நிலையில், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வேங்கைவயல் மற்றும் இறையூர் ஆகிய இரண்டு கிராம மக்களும் கோரிக்கை விடுத்து தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்தனர்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, நுண்பார்வையாளர் மூலம் கண்காணிப்பு, துணை ராணுவம் மூலம் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 549 வாக்காளர்கள் வாக்களிக்கக்கூடிய இந்த வாக்குச்சாவடியில் மாலை வரையில் வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை.

தேர்தல் புறக்கணிப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவிப்பு
தேர்தல் புறக்கணிப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தோரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன்பின்னர் வேங்கைவயல், இறையூர் கிராம மக்கள் தற்போது நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்பாக தங்கள் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in