7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்!

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழையும் 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை
மழை

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in