அக்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சொத்து வரியை அக்டோபர் 30ம்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ம்தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்டோபர் 30ம்தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ.769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர். சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in