மைக் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் லைட் எரியவில்லை என புகார்... நாம் தமிழர் வேட்பாளர் கைது!

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

மத்திய சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்துக்கு வாக்களித்தால் லைட் எரியவில்லை என்று புகார் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்ட, அக்கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய நாட்டின் 18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி இன்று முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். பூத் அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் எழுப்பினார்.

ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர். இந்த பதற்றம் காரணமாக சிறிதுநேரம் தடைப்பட்டிருந்த வாக்குப்பதிவு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த பூத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி கார்த்திகேயன்
நாம் தமிழர் கட்சி கார்த்திகேயன்

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in