திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமீன் மனு தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி!

ஆண்டோ மதிவாணன், மெர்லினா
ஆண்டோ மதிவாணன், மெர்லினா

பணிப்பெண்ணை தாக்கிய வழக்கில் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஆண்டோ மதிவாணன், மெர்லினா
ஆண்டோ மதிவாணன், மெர்லினா

பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வாக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா. சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த இவர்கள் வீட்டில், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவரை இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, 2 பேர் மீதும் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக தலைமறைவான இருவரையும் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.

ஆண்டோ மதிவாணன், மெர்லினா
ஆண்டோ மதிவாணன், மெர்லினா

இதையடுத்து, மதிவாணனும், மெர்லினாவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். பிப்ரவரி 2-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “பணிப்பெண்ணின் கல்விச் செலவுக்காக ரூ. 2 லட்சத்தை மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீஸாா் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.

ஜாமின் மனு தள்ளுபடி
ஜாமின் மனு தள்ளுபடி

பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”கைதான இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்” என்றார். காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணையை முடித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, “ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பிப்ரவரி 6-ம் தேதி வழங்கப்படும்” என அறிவித்தார். இந்நிலையில், இன்று இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in