டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டில் 175வது வெற்றியைப் பதிவு செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற 175வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

இதுவரை 576 டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இந்திய அணி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற 5 அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

412 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 392 வெற்றிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. 183 போட்டிகளில் வெற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3வது இடத்திலும், 178 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா 4வது இடத்திலும் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in