பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

மத்தியப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள ஹர்தா பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையின் உள்ளே இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ காரணமாக உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறத்தொடங்கியது. இதனால், ஆலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால், சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் அதன் அதிர்வு உணரப்பட்டது.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு படையினர் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டாசு வெடி விபத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

வெடிவிபத்தின்போது மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் காட்சிகள் மனதைப் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய ஹர்தா பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், போபால் மற்றும் இந்தூர் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in