பெரியார் மீது அவதூறு பரப்பினால் வழக்கை சந்திக்க நேரிடும்...கி.வீரமணி எச்சரிக்கை!

கி.வீரமணி
கி.வீரமணி

சங்கீத கலாநிதி விருது விவகாரத்தில் பெரியார் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பினால், மக்கள் மன்றம், நீதிமன்றங்களை சந்திக்க நேரிடும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

பாடகர் டி.எம்.கிருஷ்ணா
பாடகர் டி.எம்.கிருஷ்ணா

சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது, இந்தாண்டு கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருது வழங்கும் விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி தெரிவித்திருந்தனர். மேலும், பிராமணர்கள் இனப்படுகொலையை வெளிப்படையாக பெரியார் ஆதரித்தார். அப்படிப்பட்ட பெரியாரை போற்றும் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு இந்த விருது வழங்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தது.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்பி கனிமொழி மற்றும் பெரியார் ஆதரவாளர்கள், முற்போக்கு அமைப்புகள் குரல் கொடுத்தன. பாடகிகளுக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கருத்து பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், டி.எம்.கிருஷ்ணாவின் கலைச்சேவைக்காகவே விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவருக்கு விருது வழங்குவதில் உறுதியாகவே இருக்கிறோம். இதுதொடர்பாக பாடகிகளின் கருத்து தேவையற்றது என்று மியூசிக் அகாடமி விளக்கம் அளித்திருந்தது.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்

மியூசிக் அகாடமியின் இந்த முடிவினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து மேலும், "அவதூறுகளை புறந்தள்ளி பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது தருவதில் உறுதி காட்டும் மியூசிக் அகாடமிக்கு திராவிடர் கழகம் பாராட்டு தெரிவிக்கிறது. டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது தரக்கூடாது என்று இரு பாடகிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பெரியார் குறித்து பொய் தகவலை பரப்பியுள்ளனர். வன்முறையை எந்த நிலையிலும் ஆதரிக்காதவர் தந்தை பெரியார். பெரியார் மீது சம்பந்தமே இல்லாமல் பாடகிகள் இருவர் அவதூறு பரப்புவதன் நோக்கம் என்ன? பெரியார் பற்றி அவர் பாடக்கூடாதா?. பெரியார் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம், நீதிமன்றங்களை சந்திக்க தயாராக இருக்கட்டும்" என்று எச்சரித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!

போதை ஊசியால் இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் தொடரும் சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in