நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு முதல் முதலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த பல தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கருப்பு விவசாயி சின்னம், கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பொதுச் சின்னமாக ’மைக்’ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!

முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in