அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

முன்பு மதுவுக்கு எதிராக போராடிய நிலையில் டெல்லி முதல்வரான பின், கேஜ்ரிவால் மதுபான கொள்கையை உருவாக்க முயன்றது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காந்தியவாதியான அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்த கேஜ்ரிவால் தற்போது மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் கைது குறித்து இன்று கூறுகையில், "என்னுடன் பணியாற்றிய அர்விந்த் கேஜ்ரிவால், மதுவுக்கு எதிராக குரல் எழுப்பி, இப்போது மதுபானக் கொள்கைகளை உருவாக்குகிறார் என்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது சொந்த செயல்களால் அவர் கைது செய்யப்பட்டார்" என்றார்.
கடந்த 2011-ம் ஆண்டில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஜன் லோக்பால் இயக்கத்தைத் தொடங்கி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி
அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி

அப்போது அவரது அணியில் அர்விந்த் கேஜ்ரிவால் முக்கிய நபராக இருந்தார். இந்த இயக்கத்திலிருந்த கேஜ்ரிவால் பின்னர், தீவிர அரசியலை நோக்கி நகர்ந்தார். அப்போது தனக்கு ஆதரவை உருவாக்க அன்னா ஹசாரேவின் செல்வாக்கை பயன்படுத்துவதாக கேஜ்ரிவால் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பின்னர், 'ஆம் ஆத்மி' என்ற கட்சியை கடந்த 2012-ல் தொடங்கி, தூய்மையான அரசியல் என்ற வாக்குறுதியுடன் செயல்பட்டார். 2013 டெல்லி பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. அதன் பின்னர் பல அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு கேஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப், கோவா என ஆம் ஆத்மியை வளர்த்தெடுத்தார்.

அன்னா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவால்
அன்னா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவால்

ஒரு காலத்தில் மதுவுக்கு எதிரான காந்திய கொள்கைகளை பின்பற்றிய கேஜ்ரிவால், தற்போது மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் முறைகேட்டில் கைதாகியுள்ளார். இதனை அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்ட வழக்கு என கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இருப்பினும் அவரது முன்னாள் வழிகாட்டியான அன்னா ஹசாரே, கேஜ்ரிவாலின் செயலுக்கு தனது கவலைகளைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!

முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in