உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தொடக்கக் கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை எனவும், உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக 11 தனியார் சட்டக் கல்லூரிகளை தொடங் அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்கப்படுவதற்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்க தடைவிதிக்க வேண்டும். சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.. இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் கல்வி என்பது அடிப்படை உரிமை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 6 வயது முதல் 14 வயது வரை தொடக்கக் கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை எனவும், உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!

பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in