போலி பில் தயாரித்தால் ஜிஎஸ்டி பதிவு குளோஸ்: வணிகர்களுக்கு அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை!

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் ஆலோசனை
அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் ஆலோசனை

காலம் காலமாக போலி தயாரித்து வணிகம் செய்வோர் இருந்து வருகின்றனர். இதனால், அரசுக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க கம்ப்யூட்டரைஸ்டு பில் உட்பட பலவிஷயங்களை செயல்படுத்த அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆனாலும் கூட இந்த வணிக வரி ஏய்ப்பு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் ஆலோசனை
அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் ஆலோசனை

மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார். தொடர்ந்து, வணிகம் செய்பவர்கள் தாங்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு மாநில அரசுக்கு வரி என்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் ஆனால் வணிகம் நிறுவனங்கள் அந்த தொகையைச் செலுத்துவதில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் தயாரித்து அதன் மூலமாக வணிகம் செய்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தற்போது வணிகத்துறை அமைச்சர் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் ஆலோசனை
அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுடன் ஆலோசனை

அதன்படி, அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் வரி மோசடி செய்யும் வணிகர்கள் எதிர்காலத்தில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in