மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

பூபாலன்
பூபாலன்

விழுப்புரம் அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால்  18 வயது இளைஞர் தனது இரு கால்களையும் இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதை ஒட்டி  உயர் அழுத்த மின் கம்பி மிகவும் தாழ்வாகச் சென்றது. இதை  மாற்றியமைக்குமாறு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் சார்பில்  பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. விளைவு, 18 வயது இளைஞர் ஒருவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணியளவில், பூபாலன்(18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் பள்ளியின் அருகே கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அப்போது கிரிக்கெட் பந்து பள்ளியின் மொட்டை மாடியில் விழுந்துள்ளது. இருட்டிவிட்டதால் அதை எடுக்கவில்லை.  மறுநாள் காலையில் பள்ளியின் மொட்டைமாடிக்குச் சென்று பந்தை எடுக்க முயன்றிருக்கிறார் பூபாலன். அப்போது பள்ளியை ஒட்டி தாழ்வாகச் சென்ற  உயர் அழுத்த மின்கம்பி பூபாலன் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் மயங்கிவிட்டார். 

பூபாலன்
பூபாலன்

அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். மின்சாரம் தாக்கியதில் பூபாலனின் இரண்டு கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதியை குணப்படுத்த வழி இல்லாததால் முழங்காலுக்கு கீழே கால்கள் அகற்றப்பட்டது.

இதையடுத்து பூபாலனின் தந்தை மாரிமுத்து காணை போலீஸில் புகார் கொடுத்தார். ஜனவரி 20-ம் தேதி போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், எத்தனையோ மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்த மின் வாரிய அதிகாரிகள் பூபாலனுக்கு விபத்து நடந்த மறுநாளே உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

விபத்து நடப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்பே மின் கம்பிகளை மாற்றி அமைக்க மின்வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அதை செயல்படுத்தாமல் மின்வாரிய அலுவலர்கள் அசட்டையாக இருந்ததால் பூபாலன் தனது இரண்டு கால்களை பறிகொடுத்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in