ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்
பாரீஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்களில் ஈபிள் டவரின் இரும்பு துண்டுகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்
பாரீஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்

2024ம் ஆண்டிற்காக ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 32 முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதில், 10, 500 வீரர் வீராங்கனைகள் பங்கு பெற உள்ளன. இந்த போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு வழங்க சுமார் 5,084 பதக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு போட்டிகள் பாரீஸில் நடைபெறுவதால், அதனை வீரர், வீராங்கனைகள் என்றும் நினைவில் வைத்திருக்கவும், பிரான்சின் அடையாளமாக ஏதேனும் வழங்க வேண்டும் என பாரீஸ் ஒலிம்பிக் குழு திட்டமிட்டது.

இதையடுத்து, 1889 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்ள ஈபிள் டவரின் பழைய பாகங்களில் உள்ள இரும்பின் பகுதிகளைப் பதக்கத்தில் பதிக்கத் திட்டமிட்டது.

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் பதக்கம்

இதனையடுத்து, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களின் நடுவே, அறுகோண வடிவில் இரும்பினால் செய்யப்பட்ட ஈபிள் டவரின் பகுதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் தங்களுடன் பாரீஸின் வரலாற்றையும், விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தையும் பெற்றுச் செல்வார்கள் என பாரீஸ் ஒலிம்பிக் குழு தலை டோனி எஸ்டாங்குவே தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது, மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் பதக்கத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in