குட்நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1000!

குட்நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1000!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1,000 வங்கிகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை

சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.  இதையடுத்து ஒவ்வொரு மாதமும் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள்
மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டது. தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில்,  இந்த மாதம் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே உதவித் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

கார் மோதியதில் கால்கள் துண்டான தந்தை... உடல் நசுங்கி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

கோடிகளைக் கொட்டி பிரம்மாண்ட பங்களா... பாலிவுட்டை கலக்கும் வில்லன் நடிகர்!

வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in