பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

``தமிழ்நாடு அரசின் சார்பில் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்துடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் சேர்த்து வழங்க வேண்டும்'' என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.  

பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் பண்டிகையை மகிழ்வாக கொண்டாடும் வகையில்  ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சர்க்கரையுடன் கரும்பு, நெய் உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு எதிர்வரும் பொங்கலுக்கு  தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பாக  வழங்கப்படும்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதால் ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகையுடன் ரூபாய் ஆயிரம் தி.மு.க அரசால் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பரிசு தொகுப்பு திட்டத்தில் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் ரொக்கம் குறித்து அறிவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், பொங்கல் பரிசு தொகுப்புடன் பொதுமக்களுக்கு ரூபாய் 3000 ரொக்கம் சேர்த்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in