நான் தலைமறைவாக இல்லை... அமர்பிரசாத் ரெட்டி பரபரப்பு!

விமான நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி
விமான நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி

அரசியல் ரீதியாக மோத முடியாமல் திமுக செயல்படுவதாக பாஜக இளைஞர் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி
விமான நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியதாக அமர் பிரசாத் ரெட்டி மற்றும் அவரின் ஓட்டுநர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் இருந்ததற்கான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முதல் முறை அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் அவருக்கு நேற்று முன் ஜாமின் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த அமர் பிரசாத் ரெட்டி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தலைமறைவானதாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

விமான நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி
விமான நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி

கட்சியின் தலைமைத் தேர்தல் தொடர்பாக முக்கியமான பணியை அளித்திருந்தது. அதற்காக டெல்லி சென்றிருந்தேன். இந்த வழக்கு தொடர்பாக, கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இது என் மீது போடப்பட்ட பொய் வழக்கு. தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி பிறந்திருந்தாலும் அவர் மீது பொய் வழக்குப் போடுவார்கள். நேதாஜியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று தெரியாது. கருத்தைக் கருத்தால் மோத வேண்டும் ஆனால் பொய் வழக்குப் பதிவு செய்கிறார்கள்” என தெரிவித்தார்.

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

மேலும், “திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியனின் உறவினர் ஒருவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பாஜகவின் உறுப்பினர் ஒருவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, தன்னை ஏதும் செய்ய முடியாது என கூறினார். அதுதொடர்பாக, காவல் துறையிடம் பேசினேன். அதன் காரணமாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விடக்கூடாது என, அவர்கள் முந்திக் கொண்டு என்மீது பொய்யான வழக்கை பதிவு செய்தனர்.

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

தமிழகத்தை ஆளும் கட்சி தேர்தலுக்கு முன் என்னைக் கைது செய்ய வேண்டும் என துடிக்கிறது. பாஜகவை பார்த்து, திமுகவினர் பயப்படுவதால் நாங்கள் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி போல் செயல்படுவது உறுதியாகிவிட்டது. காவல்துறை தவறான தகவல்களைக் கொண்டு வழக்குப் பதிவு செய்கின்றனர். என்னுடன் இருப்பவர்களின் குடும்பத்தினரை இரவு பகலாக விசாரணை என்ற பெயரில் கடுமையாக தொந்தரவு செய்து வருகின்றனர். அரசியல் ரீதியாக மோத முடியாத திமுக அரசு, இப்படி அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது. ஒரு தெளிவான அரசியல் தமிழகத்தில் வர வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in