கிராம சுகாதார செவிலியர் நேரடி நியமனம்... உயர் நீதிமன்றம் திடீர் தடை!

கிராம சுகாதார செவிலியர்கள்
கிராம சுகாதார செவிலியர்கள்

கிராம சுகாதார செவிலியர்களின் நேரடி நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிராம சுகாதார செவிலியர்
கிராம சுகாதார செவிலியர்

தமிழ்நாடு பொது சுகாதார சார் நிலை பணிகளில் காலியாக உள்ள 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு  வாரியம் வெளியிட்டிருந்தது.  இது தொடர்பாக கடந்த ஜூலை மாதமே அரசாணையும் வெளியிட்டது தமிழக அரசு.

இந்த நிலையில், முறையாக அரசு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

செவிலியர்கள்
செவிலியர்கள்

சிவகங்கையைச் சேர்ந்த தெய்வானை என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்ததுடன், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருமே கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனக் கூறி, அரசு தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in