திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுமா என காத்துக்கொண்டுள்ளனர்... பாமக மீது பாலகிருஷ்ணன் மறைமுக தாக்கு!

கே பாலகிருஷ்ணன்
கே பாலகிருஷ்ணன்

திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என சில கட்சிகள் காத்திருப்பதாக சிபிஎம் பாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கே பாலகிருஷ்ணன்
கே பாலகிருஷ்ணன்

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தேர்தல் தயாரிப்பு பேரவைக் கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், "நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சி பி எம் தேர்தல் தயாரிப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது. வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தும் இன்றைக்கு வரைக்கும் மோடி அரசு ஒரு ரூபாய் வழங்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டினார்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

மேலும், “தமிழகத்தை பாஜக அரசு ஓரவஞ்சனையாகப் பார்க்கிறது. மூன்று நாட்கள் தமிழகத்திற்கு வந்த மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மணி நேரமாவது ஒதுக்கி சந்தித்து இருக்கலாம். அதிமுக ஒரு பக்கம் கூட்டணிக்காகக் கடையைப் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என்று சில கட்சிகள் காத்திருக்கிறது” என அவர் பாமகவை மறைமுகமாகச் சாடினார்.

ஆனால், திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது. இந்த தேர்தலில் கூடுதலாக தங்களுக்கு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளதாகவும், விரைவில் தேர்தல் பணியைத் துவங்க உள்ளதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in