அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி; திமுக அமைச்சரின் சதி... 2ம் இடம்பிடித்த மாடுபிடி வீரர் வழக்கு தொடர போவதாக பேட்டி!

அபிசித்தர்
அபிசித்தர்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் செய்யப்படுவதாக மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டில் அபிசித்தர்
ஜல்லிக்கட்டில் அபிசித்தர்

மதுரை பாலமேடு, அவனியாபுரம்  பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று (17-01-24) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த நிலையில் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 17 காளைகளை அடக்கி அபிசித்தர் இரண்டாவது இடம் பிடித்தார். 

இறுதி நேரத்தில் முதலிடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதிச் சுற்றில் கார்த்திக் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார். கார்த்திக் கடந்த 2022 ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும், அபிசித்தர் 2023 ம் ஆண்டு நடந்த  ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கிற்கு முதல் பரிசாக காரும், அபிசித்தருக்கு பைக்கும் பரிசளிக்கப்பட்டது.

ஆனால் இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர்  இரண்டாம் பரிசை  ஏற்க மறுத்து செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டுக்களை  முன் வைத்தார்.    '' நான் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபிசித்தர். கடந்த 2023 ம் ஆண்டு இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகளை பிடித்து முதல் பரிசு வாங்கினேன். ஆனால் 26 மாடு தான் பிடித்தேன் என்று அறிவித்தார்கள். அப்பொழுதும் அரசியல் செய்தார்கள். இந்த அரசு அரசியல் தான் செய்கிறார்கள். 

இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம். போன ஆண்டும் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் ரெக்கமண்டில் வந்தார். வேண்டுமென்றால் சக வீரர்கள் எல்லாரையும் கேட்டுவிட்டு இதற்கு ஒரு நியாயம் தர வேண்டும். இன்றைக்கும் கார்த்திக் ரெக்கமெண்டில்தான் உள்ளே வந்தார். அவர் மூன்று பேட்ஜில் மாடு பிடித்திருக்கிறார். நான் இரண்டு பேட்ஜில்தான் மாடு பிடிச்சிருக்கேன். அவர் மட்டும் எப்படி மூன்று பேட்ஜில் மாடு பிடிக்கிறார் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி  என்னை அடித்து வெளியே விரட்டி விட்டார்கள். 

இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் 17 மாடு பிடித்துள்ளேன். அவரும் 17 மாடு பிடித்தார். ஆனால் இதை கமிட்டியாளர்கள் கண்டு கொள்ளாமல் அவருக்கு முதல் பரிசை கொடுத்துவிட்டார்கள். இது முழுமையாக அமைச்சரின் சதி. விளையாட்டை விளையாட்டாக வைத்திருக்க வேண்டும். இதில் அரசியலை இழுத்து விடக்கூடாது. நான் நீதிமன்றத்திற்கு போகப் போறேன். வீடியோ பார்த்து யார் முதலிடம் என கண்டறிந்து அதே இடத்தில் மேடை போட்டு அறிவிக்க வேண்டும்" என்றார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த  அமைச்சர் மூர்த்தி, "விதிகளின்படியே போட்டி நடைபெற்றது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. விழா குழு முடிவின்படியே பரிசுகளை வழங்கியுள்ளோம். இங்கே எல்லோருமே சரியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேருக்குமே சம வாய்ப்பு இருந்தது. அதில் இரண்டு வாய்ப்பு கார்த்திக்கு நழுவிப் போனது. இருவரும் சமநிலையில் இருந்து கடைசியாக கார்த்திக் கூடுதலாக ஒரு மாடு பிடித்ததால் முதலிடம் பிடித்துள்ளார். 

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

இது நேரடியாக மீடியாக்களில் வந்தது. இதில் யாருடைய பாகுபாடும் இல்லாமல் எல்லாருடைய கண்காணிப்பிலும் இது நடந்தது. எல்லாவற்றுக்கும் வீடியோ இருக்கிறது. வீடியோவில் எந்த குளறுபடியும் இல்லை. இந்த ஜல்லிக்கட்டு யாருக்கும் பாகுபாடு இல்லாமல், எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி இருந்தார்கள்” என்றார். மாடுபிடி வீரரின் இருந்த குற்றச்சாட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டு... அயோத்தி ராமர் கோயிலுக்கு சாலை வழியாக அனுப்பப்படுகிறது!

அயோத்தி ராமரை பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்னேஷ்சிவனுக்கு டாட்டா பை... பை... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in