'எனக்கு உடல்நிலை சரியில்லையா?': முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

அயலகத் தமிழர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அயலகத் தமிழர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated on
2 min read

எனக்கு உடல்நிலை சரியில்லை என, சிலர் பேசுவது சிரிப்பை ஏற்படுத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ எனும் கருப்பொருளை மையமாக கொண்டு ‘அயலகத் தமிழர் விழா’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் ‘அயலகத் தமிழர் விழா’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளான இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ‘எனது கிராமம்’ என்கிற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பங்கேற்ற அயலகத் தமிழர்கள்
விழாவில் பங்கேற்ற அயலகத் தமிழர்கள்

இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், " எனக்கு எப்போதும் மக்களை பற்றியே நினைப்பாக இருக்கிறது. நான் என்னைப் பற்றி நினைப்பதே கிடையாது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன்.

என் சக்தியை மீறி உழைக்கிறேன். தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன குறை இருந்துவிடப் போகிறது? தமிழர்களின் மகிழ்ச்சியால் எனக்கு எந்தவித குறையும் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

எனக்கு ‘உடல்நிலை சரியில்லை’ என சிலர் பேசுவதை பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் அறிக்கையில் கூறியபடி அயலகத் தமிழர்களுக்காக தனித்துறையை உருவாக்கியது திமுக அரசுதான்.

மேலும் அயலகத் தமிழர்கள் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் கற்றுத்தரப்படுகிறது’ என்று பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'...பிரேமலதா விஜயகாந்தை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜை... தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயு...பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு!

அதிர்ச்சி... பயங்கர விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!

டென்னிஸ் மைதானத்தில் கிரிக்கெட்... ஜோகோவிச், ஸ்டீவ் ஸ்மித் அலப்பறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in