பேருந்து விபத்து
பேருந்து விபத்து

சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டை- அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

சென்னை மாநகரப் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் ஒருவர் விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து

சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்றில் இன்று காலை ஏராளமான பயணிகள் சென்றனர். அந்த பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது, பேருந்தில் ஒரு ஓட்டை விழுந்து பெண் ஒருவர் அதில் விழுந்தார். அந்த பெண்ணும், இதனைக் கண்ட சக பயணிகளும் கத்தி அலறி சத்தம் போட்டனர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் பதறியடித்துக்கொண்டு கீழே இறங்கி, ஓட்டையில் விழுந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்தை ஆய்வு செய்ததில், ஓட்டை விழுந்த இடத்தில், ஏற்கனவே ஓட்டை இருந்ததாகவும், அதனைப் போக்குவரத்து ஊழியர்கள் பலகை வைத்து மூடியுள்ளனர். அந்த பலகை முறிந்து இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளம் மூலமாகத் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in