மாதம் 80,000 ரூபாய் சம்பளம்... சென்னையில் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்
சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (என் ஐ ஆர் டி) செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 33 காலிப் பணியிடங்கள் உள்ளதால் அவற்றை நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ப்ராஜெக்ட் ரிசர்ச் சயின்டிஸ்ட், ப்ராஜெக்ட் டெக்னிகல் சப்போர்ட், ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த துறைகள் சார்ந்த படிப்பு படித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 15,800 முதல் 80 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

இதற்கு என்.ஐ.ஆர்.டி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள வாக் இன் எழுத்துத் தேர்வுடன் கூடிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in