சென்னையில் மோசமான வானிலை... 8 விமானங்கள் ரத்து!

சென்னையில் மோசமான வானிலை... 8 விமானங்கள் ரத்து!

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நான்கு விமானங்களும் சென்னைக்கு வருகை தர வேண்டிய நான்கு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நான்கு விமானங்களும், சென்னைக்கு வருகை தர வேண்டிய நான்கு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (30.11.2023) காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்ல இருந்த விமானம், காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஆந்திரா மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!

கனமழை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொழிலதிபரைக் கடத்திய 2 பேர் என்கவுன்டர்!

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in