உஷார்...சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி
Updated on
2 min read

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளதால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அடையாறு ஆற்றில் 40,000 கன அடி வரை தண்ணீர் சென்றாலும் எந்த பாதிப்பு வராது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.53 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அதாவது 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3 ஆயிரத்து 286 மில்லியன் கன அடியாக உள்ளது.

சீறிப்பாயும் தண்ணீர்
சீறிப்பாயும் தண்ணீர்

அதே சமயம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் (28.11.2023) காலை 10 மணி முதல் 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று (29.11.2023) காலை 9 மணி முதல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீர் எனவும், அதன் பிறகு 2500 கன அடி நீர் எனவும் திறக்கப்பட்டு வந்தது.

செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம்

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று (30.11.2023) காலை 8 மணி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, காவனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in