ரியாத் கால்பந்து தொடர்... அரங்கை அதிரவிட்ட அண்டர்டேகர்!

அண்டர்டேகர்
அண்டர்டேகர்

ரியாத் கால்பந்து தொடரின் கோப்பையை அறிமுகம் செய்யும் விழாவில் பங்கேற்ற ரெஸ்ட்லிங்  வீரர் அண்டர்டேகர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

சாம்பியன் கோப்பையை வென்ற அல் ஹிலால் அணி
சாம்பியன் கோப்பையை வென்ற அல் ஹிலால் அணி

சவுதி அரேபியாவில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து போட்டி தொடர்களில் ஒன்றான ரியாத் சீசன் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வரும் அல் நசார் மற்றும் அல் ஹிலால் அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-0 என்ற கணக்கில் அல் ஹிலால் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது ரொனால்டோ ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

அண்டர்டேகர்
அண்டர்டேகர்

ஆனால், இந்த போட்டியில் தரமான சம்பவம் ஒன்று நடந்து ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியது. அதாவது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மைதானத்தின் நடுவே கோப்பை இருக்க. இருபுறமும் இரு அணி வீரர்களும் நின்றிருந்தனர்.

யார் கோப்பையை அறிமுகம் செய்ய வருவார்கள் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க. மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

Summary


அப்போது, இருபுறமும் தீப்பந்தம் ஏந்தி சிலர் நிற்க ரெஸ்ட்லிங் வீரர் அண்டர்டேகர், தனது வழக்கமான தீம் இசையுடன் நடந்து வந்தார். பின்னர் வெற்றிக்கோப்பையை தூக்கி காண்பித்து அனைவரையும் மிரள வைத்தார். இதனால், மைதானத்திலிருந்து ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதையும் வாசிக்கலாமே...

ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in