ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி
ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி தொடருமா?- ஆப்கானிஸ்தானுடன் மோதல்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் 9வது லீக் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்குள் சுருட்டியதோடு, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி, லோகேஷ் ராகுலின் அரைசதமும், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் வெற்றியை எளிதாக்கின. இந்த வெற்றியின் உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முகமது ஷமி அல்லது ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியில் வங்கதேசத்திடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், அந்த அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிய வைக்கும் முயற்சியுடன் களமிறங்குகிறது. அந்த அணியின் ரஷீத் கான், மூஜீப் ரகுமான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால், இந்திய வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என்றாலும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தானுடனான ஆட்டத்திற்கு நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி
மகனுக்கா... மருமகளுக்கா? - சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி
தொடங்கியது முழு அடைப்பு... முடங்கியது டெல்டா... காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்!
ரோகித் ஷர்மா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in