6 வது முறையாக அண்டர் 19 உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா - ஆஸ்திரேலியாவுடன் நாளை இறுதிப்போட்டி!

இந்தியா - ஆஸ்திரேலியா கேப்டன்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா கேப்டன்கள்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய அணி 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றி 2-வது வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா கேப்டன்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா கேப்டன்கள்

சமபலமிக்க இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி 6-வது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது ஆஸ்திரேலிய அணி 4-வது முறை கோப்பையை வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கடந்த 2000ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி வென்றது. இதற்கு பிறகு, கடந்த 2006ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2008ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது. இதன்பின், 2012ல் இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து, இஷான் கிஷான் தலைமையிலான அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி வரை சென்றாலும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா

2018ம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை யஷ் துல் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் மீண்டும் இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை இந்திய அணியின் தலைமை உதய் சஹாரன் கையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஆறாவது பட்டத்தை வென்று சாதனை படைக்கும்.

19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம். அதேபோல இந்த இறுதிப் போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்-இல் இலவசமாக காணலாம்.

அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி விவரம் : அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா, முஷீர் கான், உதய் ஷஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ், சௌமி குமார் பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ஆராத்யா சுக்லா, நமன் திவாரி.

இதையும் வாசிக்கலாமே...


அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in