பகீர் வீடியோ... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

மருத்துவமனையில் நடனமாடிய மாணவர்கள்..
மருத்துவமனையில் நடனமாடிய மாணவர்கள்..

கர்நாடக மாவட்டம் கடாக்கில் உள்ள கடாக் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஜிம்ஸ்) மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று நேர்ந்து கன்னட மற்றும் இந்தி திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ்களாக வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பலரும் மருத்துவமனையில் நோயாளிகளின் முன்னிலையில் மாணவிகள் நடனமாடியதற்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து, விமர்சித்த நிலையில், மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 38 மாணவர்கள், தங்களது மோசமான நடவடிக்கைக்காக கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் மாணவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியான நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த வீடியோவில் மாணவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை மையம், பிரசவ வார்டு என்று மருத்துவமனையின் பல தளங்களில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி இருக்கின்றனர். ஜிம்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, மேற்பார்வை குறித்து பொதுமக்கள் பலரும் கொந்தளிக்க உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து அவசர அவசரமாக வீடியோக்கள் நீக்கப்பட்டன.

மாணவர்களின் இந்த நடத்தைக் குறித்து ஜிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பசவராஜிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், நேற்று நடந்த இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்ததும் உடனடியாக கல்லூரியில் இருந்து 38 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடனமாடிய மாணவர்களில் 15 ஹவுஸ் சர்ஜன் மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் வரும் ஏப்ரல் மாதத்துடன் தங்களது படிப்பை வெற்றிகரமாக படித்து பட்டம் பெற உள்ளனர்.

கல்லூரி முதல்வரின் விசாரணையில், பட்டமளிப்பு விழாவின் முன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், கடந்த 5 வருடங்களாக தங்களது நேரத்தை இந்த வளாகத்திலேயே கழித்துள்ளதால், கல்லூரியின் நினைவாக அனைத்து வார்டுகளின் முன்பாகவும் இப்படி நடனமாடி வீடியோ பதிவு செய்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்ததாக இயக்குநர் பசவராஜ் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in