அடேயப்பா...ஒரு ஆண்டில் பாஜக செய்த தேர்தல் விளம்பரச் செலவு ரூ.432 கோடி!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா.

கடந்த ஓராண்டில் தேர்தல் செலவுகளுக்காக பாஜக 432 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி கணக்கு தாக்கல் செய்துள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.  மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ள பாஜக, அதற்கான உத்திகளை வகுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி அரசியல் கணக்குகளைப் போட்டு செயல்படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியை உடைப்பது, தங்கள் பழைய கூட்டாளிகளை மீண்டும் கூட்டணியில் இணைப்பது, புதிய, சிறிய கட்சிகளுக்கு வலை வீசுவது என பாஜகவின் வியூகம் பலப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு, செலவு கணக்கின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக கடந்த ஒரே ஆண்டில் சுமார் ₹432 கோடி செலவு செய்துள்ளது.  அதில் பாதி அளவு தொகை வட்டியாகவே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. வங்கிகளில் அக்கட்சி செய்துள்ள முதலீடுகளில் இருந்து 2022-23-ம் நிதியாண்டில் பாஜகவுக்க வட்டியாக மட்டும் ₹237 கோடி கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அக்கட்சியின் கடந்த ஆண்டு வருமானம் ₹2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பழைய செய்தித் தாள்களை  விற்றதன் மூலம் லாபம் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ₹6 லட்சம் குறைந்துள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரும் பணக்கார கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.  கடந்த ஓராண்டில் நடைபெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக  432 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க இதைவிட பல மடங்கு தொகையை அக்கட்சி செலவழிக்கும் எனவும், தேர்தலை முன்னிட்டு பல பெரும் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாயை பாஜகவுக்கு  நன்கொடையாக வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in