ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!

ஐபிஎல் கோப்பை, டிக்கெட்
ஐபிஎல் கோப்பை, டிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் பல்லாயிரம் ரூபாய் அதிக விலை வைத்து, கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு திமுக உடந்தையாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் ரூ.12 ஆயிரத்துக்கும், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள டிக்கட் ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தி.மு.க. நிர்வாகிகள் மூலம் ஐ.பி.எல். டிக்கெட்டுகள் விற்பனை நடப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் 2024 நட்சத்திர வீரர்கள்
ஐபிஎல் 2024 நட்சத்திர வீரர்கள்

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ள 17 வது ஐபிஎல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதேபோல் பெங்களூரு, ஹைதராபாத், பூனா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துவிட்டு, தற்போது திமுக நிர்வாகிகள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சியினரை குஷிப்படுத்த திமுகவினர் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அதிமுகவினரும் இந்த குற்றச்சாட்டையொட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி, கெளதம சிகாமணி
உதயநிதி, கெளதம சிகாமணி

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை புக் செய்ய சென்றால் சர்வர் எரர் என காண்பிக்கிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடங்களில் சர்வர் எரர் என காண்பித்து வருவதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக 2000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய டிக்கெட்டுகள் 12 ஆயிரம் ரூபாய்க்கும், நான்காயிரம் ரூபாய் டிக்கெட்டுகள் 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் புலம்புகின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொன்முடியின் மகன் இருப்பதாலும், விளையாட்டுத்துறை அமைச்சராக தமிழக அமைச்சரின் மகன் உதயநிதி இருப்பதாலும் டிக்கெட்டுகள் அனைத்தும் திமுக பிரமுகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழகம் முழுவதும் பரபரப்பு... ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு!

பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!

பெங்களூரு மட்டுமல்ல சென்னை உட்பட இந்தியாவின் மேலும் 5 நகரங்கள்... தண்ணீர் பஞ்சத்தால் விரைவில் நரகமாகும்!

குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in