பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்.
திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்.

திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் இருந்தபோதும், தொகுதியை எஸ்டிபிஐ கட்சிக்கு தாரைவார்த்துள்ளது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் கட்சியைத் துவக்கி முதன்முதலில் போட்டியிட்டது திண்டுக்கல் மக்களவை தொகுதியில் தான். இந்த தேர்தலில் தான் அதிமுகவிற்கு சுயேட்சை சின்னமான இரட்டை இலை சின்னம் கிடைத்தது. பின்னர் இதுவே அதிமுகவின் நிரந்தர சின்னமாக மாறியது. இதையடுத்து வந்த ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் திண்டுக்கல் தொகுதியை சென்டிமென்டாக நினைத்து தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றியும் பெற்றுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் - நத்தம் விஸ்வநாதன்
திண்டுக்கல் சீனிவாசன் - நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவின் திண்டுக்கல் தொகுதி சென்டிமென்ட் எல்லாம் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு மறக்கப்பட்டுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அதன் பிறகு அதிமுகவை நடத்திவரும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்தபோது கடந்த 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கியது.

இதற்குக் காரணம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் இடையே ஏற்பட்ட கோஷ்டிபூசல் தான் காரணம் என கூறப்பட்டது. அதிமுகவின் சென்டிமென்ட் தொகுதி கைவிட்டு போனதில் அதிமுகவினர் சோர்வடைந்தனர். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்.
திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்.

இந்த முறை 2024 மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக்கட்சிகளுக்கு தராமல் அதிமுக நேரடியாக களம் காணும் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், இந்த முறையும் சென்டிமென்ட் தொகுதி மீட்டெடுக்கப்படாமல் கூட்டணிக்கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு தாரை வார்த்தது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தமுறையும் அதிமுக போட்டியிடாததற்கு காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் தான் என்று கூறப்படுகிறது. இந்த முறை ஆளுங்கட்சியாக இல்லாததால் இருவரின் கோஷ்டிபூசல் சற்றே குறைந்திருந்தாலும், வேட்பாளரை தயார் செய்ய இருவரும் தயக்கம் காட்டியதன் விளைவு தான் அதிமுகவின் இந்த நிலை என்கின்றனர் அந்த கட்சியின் நிர்வாகிகள்.

தங்கள் வாரிசுகள் யாரையாவது களம் இறங்கவையுங்கள் என பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டபோதும், இரு முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட தயங்கி பின்வாங்கியது தான் இந்தமுறையும் கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்க காரணமாகிவிட்டது. இந்தநிலை தொடர்ந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக கட்சியை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவர அதிக சிரமப்படவேண்டியதிருக்கும் என பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள், தொண்டர்கள் மனமுடைந்து சொல்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

மகனுக்கு சீட் இல்லை... திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி!

சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

களமிறங்கும் விஜயகாந்த் குடும்பம்... விருதுநகரில் விஜய பிரபாகரன்; கள்ளக்குறிச்சியில் சுதீஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in