உலகக் கோப்பை இறுதிப்போட்டி… வண்ணமயமாக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ!

விமானப்படை ஒத்திகை
விமானப்படை ஒத்திகை

நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இடையே பல வண்ணமயமான நிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. அதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி நிரல்

நாளை போட்டிக்கு முன்னதாக பிற்பகல் 1.35 மணி முதல் 1.50 மணி வரை இந்திய விமானப்படையின், சூர்யகிரண் குழுவினரின் வண்ணமயமான விமான சாக நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. போட்டியின் முதல் இடைவேளையின் போது பாடகர் ஆதித்திய கத்வியின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ஆட்டத்தின் இன்னிங்ஸ் பிரேக்கின் போது பிரீத்தம் சக்ரபோர்தி, ஜோனிடா காந்தி, நகாஷ் அஜிஸ், அமித் மிஸ்ரா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் ஜோஷி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் போது வரும் இடைவேளையில் வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in