அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மருத்துவர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மருத்துவர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது நண்பர்களுடன் அவர் சிரித்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கேஸ் என்று நினைத்து மருத்துவர் அபிஷேக் அசிடிட்டி மருந்து சாப்பிட்டுள்ளார்.

மருந்து சாப்பிட்ட பிறகும் வலி குறையாததால் நண்பரின் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிஷேக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாரடைப்பால் 28 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

நடனமாடும்போது, ஜிம்மில் ஓர்க்அவுட் செய்யும் போது என திடீர் திடீரென மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாக இவ்வாறு நடப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in