இந்தியாவுக்கு எதிரான போட்டி… டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த இலங்கை!

இந்தியா - இலங்கை மோதல்
இந்தியா - இலங்கை மோதல்

இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கி இருக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் 33வது ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்ததால் இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி இருக்கிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், 6-ல் 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து துவண்டுள்ள இலங்கை அணி வெற்றிக்காக போராடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து தோல்வியை தழுவியது. அதேபோல், ஆசிய கோப்பை இறுதி போட்டியிலும் அந்த அணி இந்தியாவிடம் முதலில் பேட்டிங் செய்து 50 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதன் காரணமாகவே, இன்றைய போட்டியில் அந்த அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in