குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அறிவியல் செய்முறை தேர்வு
அறிவியல் செய்முறை தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் செயல் திட்ட தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க  மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடைபெறவுள்ள ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல் 21.08.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பதிவு செய்ய  விடுபட்டுள்ள மாணவர்களுக்கு தற்போது மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.

தற்சமயம் தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 06.11.2023 ( திங்கள் கிழமை) முதல் 10.11.2023 (வெள்ளிக்கிழமை) வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 06.11.2023 முதல் 10.11.2023 வரை பதிவிறக்கம் செய்து. விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து 10.11.2023 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்  நேரில் ஒப்படைக்க வேண்டும்.

அறிவியல் செய்முறை தேர்வு
அறிவியல் செய்முறை தேர்வு

இதற்கு  பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது பயிற்சி வகுப்புக்கான  பதிவு மட்டுமே. ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள இத்தேர்வர்கள் (முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள / ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகைப்புரியாத தேர்வர்கள் இத்துறையால் பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டு சமர்ப்பித்து பொதுத்தேர்விற்கு பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் வழங்கப்படும் ஏப்ரல் 2024- ஆண்டிற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டே தேர்வர்கள் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in