ஆசைப்பட்டா என்ன தப்பு?ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!

நடிகர் விஜய்...
நடிகர் விஜய்...

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தபடி ரஜினியின் காக்கா - கழுகு கதைக்கு நடிகர் விஜய் 'லியோ' மேடையில் பதிலடி கொடுத்துள்ளார்.

'ஜெயிலர்' படவிழாவில் 'காக்கா - கழுகு' குட்டிக்கதை மூலம் சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு மட்டும்தான் என விஜயின் வளர்ச்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக பேசியதற்கு 'லியோ' பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, பதிலடி கொடுத்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.

'வாரிசு' பட ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்து பேச்சை ஆரம்பித்தார் விஜய். " இவ்வளவு நாள் நான் தான் உங்களை என் நெஞ்சில் வைத்திருந்தேன் என நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் தான் என்னை உங்கள் நெஞ்சுக்குள் குடி வைத்திருக்கிறீர்கள். ஏதோ சினிமா வசனம் போல பேசறேன் என நினைக்க வேண்டாம். உங்களுக்கு நான் செய்ய முடிவது ஒன்று மட்டும்தான். அது உங்களுக்கு உண்மையாக இருப்பது. நீங்கள் எல்லாருமே பிளடி ஸ்வீட்ஸ்.

கொஞ்ச நாளா பாக்குறேன் உங்களுடைய கோபம் எல்லாம் சோஷியல் மீடியாவுல ரொம்ப அதிகமா இருக்குது. நண்பா அது வேணாம்! நமக்கு நிறைய வேலை இருக்கு. இந்த சமயத்துல காந்தி சொன்னது தான் ஞாபகம் வருது. ' அடிதடி என வன்முறையோடு இருப்பதை விட நான்- வயலன்ஸ் தான் அதிக ஆபத்தானது'. அதனால் இதெல்லாம் வேண்டாம்" என்றவர் குட்டி ஸ்டோரிக்கு நகர்ந்தார்.

" ரெண்டு பேர் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. அங்க யானை, முயல், காக்கா, கழுகு எல்லாமே இருக்கிறது" என்று ரஜினியை மறைமுகாமத் தாக்கும் விதமாக விஜய் சொன்னவுடன் நேரு ஸ்டேடியம் மொத்தமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் குலுங்கியது. அதற்கு நடிகர் விஜய் "இல்ல... காக்கா கழுகு எல்லாம் காட்டுக்குள்ள இருக்கும் இல்ல? அதுதான் சொன்னேன்" என்று சொன்னார். அதன் பிறகு, "நம்மால் எது ரொம்ப ஈஸியா ஜெயிக்க முடியுமோ அது வெற்றி கிடையாது. நம்மால் எது முடியாதோ அதற்கு ஆசைப்பட வேண்டும். சின்னதாக ஆசைப்படுவது குற்றம் என சொல்கிறார்கள். ஒரு சின்ன பையன் அவன் அப்பாவோட டிரஸைப் போடுவான், வாட்ச் கட்டுவான். ஆனா அது பெருசா தொளதொளன்னு இருக்கும். ஆசைப்படலாம் அதுல என்ன தப்பு இருக்கு?" என்றார்.

"புரட்சித்தலைவர் என்றால் ஒருத்தர்தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான். தளபதி என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியும் தானே! அதாவது மன்னனுக்கு கீழே இருப்பார்கள். மக்களாகிய நீங்கள் தான் மன்னன். உங்களுக்கு கீழே இருக்கிற தளபதி நான். நீங்க ஆணையிடுங்க நான் செஞ்சுட்டு போறேன்" என அடுத்த சூப்பர் ஸ்டார் பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய்.

'லியோ' படத்தில் நான் ரெடி பாடலில் சிகரெட், குடிப்பழக்கம் போன்றவற்றை புகழும் விதமாக அமைந்துள்ள வரிகளுக்கு சென்சாரில் பிரச்சனை எழுந்தது பற்றி நடிகர் விஜய் பேசியிருப்பதாவது, "தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் வழியில் அத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. அங்கே எல்லாம் சென்று தினமும் நாம் குடித்துக்கொண்டு இருப்பது இல்லையே? எது நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். ரசிகர்கள் என் மீது அன்பு செலுத்தினாலும் என்னுடைய படம் நன்றாக இல்லை என்றால் அதை விமர்சிக்கவே செய்கிறார்கள். அந்த அறிவும் முதிர்ச்சியும் அவர்களுக்கு இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in